உலகின் மிகவும் ‘அழகான’ மனித ரோபோவை உருவாக்கும் சீன நிறுவனம்

உலகின் மிகவும் ‘அழகான’ மனித ரோபோவை உருவாக்கும் சீன நிறுவனம்

சீனாவின் ஷாங்காயை தளமாகக் கொண்ட ரோபாட்டிக்ஸ் நிறுவனமான ஃபோரியர் ரோபாட்டிக்ஸ், எதிர்வரும் ஓகஸ்ட் ஆறாம் திகதி அதன் GR-3 மனித உருவ ரோபோவை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது.

இந்த ரோபோ உலகின் மிகவும் அழகான மனித உருவ ரோபோ என்று விவரிக்கப்படுகிறது. புதிய ரோபோ அதன் முந்தைய வடிவமைப்பான GR-1 மற்றும் GR-2 ஆகியவற்றுடன் சிறியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, GR-3 சுமார் 4 அடி 5 அங்குலம் (134 செ.மீ) உயரத்தில் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது ஃபோரியரின் முந்தைய வடிவமைப்பான GR-1 (5.4 அடி/165 செ.மீ) மற்றும் GR-2 (5.74 அடி/175 செ.மீ) மாடல்களை விட குறிப்பிடத்தக்க வகையில் சிறியதாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ரோபோ வீடுகள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் பொது இடங்களில் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பயனர்களுடன் இயல்பான பேச்சு ஈடுபாட்டை செயல்படுத்த ஒருங்கிணைந்த பெரிய மொழி மாதிரி (LLM) இதில் இடம்பெற்றுள்ளது.

ஃபோரியர் நிறுவனம் GR-1 ரோபோவை 2023ஆம் ஆண்டிலும், GR-2 ரோபோவை 2024ஆம் ஆண்டிலும் அறிமுகப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This