சீனா உருவாக்கியுள்ள இராட்சத விமானம் தாக்கி போர்க் கப்பல்

சீனாவின் புதிய ஃபுஜியன் விமானம் தாங்கி ஆயுதக் கப்பல் சோதனைகளுக்குப் பின்னர் போருக்குத் தயாராக இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
J-15T, J-35 மற்றும் KJ-600 ஆகிய ஜெட் விமானங்கள் ஆகிய மூன்று விமானங்கள், ஃபுஜியன் கப்பலில் இருந்து புறப்பட்டு, மீளவும் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளது.
இதன்படி மிக விரைவில் ஃபுஜியன் விமானம் தாங்கி கப்பல் இயக்கப்படும் என சீன பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சீன மத்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஃபுஜியன் விமானம் தாங்கி கப்பல் சீனாவின் மற்ற இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களான ஷாண்டாங் மற்றும் லியோனிங் ஆகியவற்றுடன் இணைவதன் மூலம் தற்போது இருப்பதை விட வலுவான சக்தியை பெற முடியும் என நம்பிக்கை வெளியிட்டார்.
சீனாவின் முதல் இரண்டு விமான கப்பல்களைப் போல் இல்லாமல் ஃபுஜியன், சீனாவின் முதல் விமான கப்பல் அடிப்படையிலான நிலையான இறக்கை முன் எச்சரிக்கை விமானமாக காங்ஜிங்-600ஐ இயக்கும் திறக்கொண்து என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஃபுஜியன் விமானம் தாங்கி கப்பல் ஏற்கனவே பல கடல் சோதனைகளுக்கு உட்பட்டுளு்ளது. கப்பலின் முழுமையான நிலைமைகளையும், தொழில்நுட்ப தேவைகளையும் பூர்த்திசெய்துள்ளது.
மேலும், மூன்று வகையான விமானங்களும் கப்பலில் இருந்து புறப்பட்டு, பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளது. இது கப்பலின் நம்பக் தன்மையை மேலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஃபுஜியன் விமானம் தாங்கி ஆயுதக் கப்பல் போருக்கு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.