சீனா 3.7 பில்லியன் டொலர் நேரடி முதலீடு – இலங்கைக்கு மிகப்பெரிய வாய்ப்பை உருவாக்கும்

சீனா 3.7 பில்லியன் டொலர் நேரடி முதலீடு – இலங்கைக்கு மிகப்பெரிய வாய்ப்பை உருவாக்கும்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நான்கு நாள் உத்தியோகபூர்வ பயணமாக சீனா சென்றுள்ள நிலையில், இந்தப் பயணத்தில் இலங்கைக்கு கிடைத்த பாரிய முதலீட்டு வாய்ப்பொன்று கிடைக்கப்பெற்றுள்ளது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இந்த வாய்ப்பின் ஊடாக இலங்கையில் சீனா 3.7 பில்லியன் டொலர்களை நேரடியாக முதலீடு செய்ய உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்கான ஒப்பந்தம் இலங்கை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கும் சீனாவின் சினோபெக் முன்னணி சர்வதேச பெற்றோலிய நிறுவனத்திற்கும் இடையில் கைசாத்திடும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை  இடம்பெற்றது.

இந்த 3.7 பில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் கீழ் ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்படும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 02 இலட்சம் கொள்ளளவுடைய எண்ணெய் தாங்கிகளை கொண்டுள்ளதுடன், அவற்றில் பெருமளவான தொகையை ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

சீனாவிடமிருந்து இலங்கைக்கு கிடைத்த இந்த புதிய முதலீடு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்துவதுடன் ஹம்பாந்தோட்டையின் குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பலப்படுத்தும். அத்துடன் முழு இலங்கை மக்களுக்கும் இதன் பலன் மிக விரைவில் கிடைக்கப்பெறும் என ஜனாதிபதியின் சீன பயணத்தில் இணைந்துள்ள அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

சீனாவின் இந்த முதலீடுகள் ஊடாக் இலங்கையின் பொருளாதாரம் அபிவிருத்தியடையும் என்பதுடன், இதன் பலன்களும் விரைவில் மக்களுக்கு கிடைக்கப்பெறும். ஜனாதிபதியின் சீன பயணத்தில் கிடைக்கப்பெற்ற மிகப்பெரிய முதலீட்டு திட்டமாக இதனை பார்க்கிறோம் என்றும் அவர் கூறினார்.

Share This