இலங்கையின் விவசாய நடவடிக்கைகளுக்கு சீனா ஆதரவு

இலங்கையின் விவசாய நடவடிக்கைகளுக்கு  சீனா ஆதரவு

இலங்கைக்கு விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்குத் தேவையான உதவிகளை வழங்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது.

விவசாயத் துறையில் முதலீடு செய்யத் தயாராக இருப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது.

சீனா-இலங்கை விவசாய நடவடிக்கைகள் குறித்த சிறப்பு கலந்துரையாடல் விவசாய திணைக்களத்தில் நடைபெற்றது.

இரு நாடுகளின் விவசாயத் துறை தொடர்பான அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

தற்போதைய அரசாங்கம் உணவுப் பாதுகாப்பில் கவனம் செலுத்துவதன் மூலம் விவசாயத் தொழிலை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக விவசாய திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

 

Share This