அமெரிக்க பொருட்களுக்கு 84 வீத வரி விதிப்பு – சீனா பதிலடி

அமெரிக்க பொருட்களுக்கு 84 வீத வரி விதிப்பு – சீனா பதிலடி

ஏப்ரல் 10ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அமெரிக்க பொருட்களுக்கு சீனா 84 வீத வரியை விதித்துள்ளது

இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட 34 சதவீத வரி 84 வீதமாக உயர்த்தப்படுவதாக சீன நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

பெய்ஜிங்கின் மீது பரஸ்பர வரிகளை விதிக்க அமெரிக்கா எடுத்த முடிவு உலகளாவிய வர்த்தகத்தை மேலும் சீர்குலைக்கும் என சீனா உலக வர்த்தக அமைப்பிடம் தெரிவித்துள்ளது.

நிலைமை ஆபத்தானதாக மாறியுள்ளது. பாதிக்கப்பட்ட உறுப்பினர்களில் ஒருவராக, சீனா இந்த பொறுப்பற்ற நடவடிக்கைக்கு கடுமையான கவலையையும் உறுதியான எதிர்ப்பையும் உலக வர்த்தக அமைப்பிடம் வெளிப்படுத்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின்  “பரஸ்பர” வரிகள் இன்று புதன்கிழமை அமலுக்கு வந்துள்ளன.  இதில் சீன பொருட்கள் மீது 104 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது.

இந்தப் பின்புலத்திலேயே அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் முகமாக சீனா 34% வரியை 84 வீதமாக உயர்த்தியுள்ளது.

Share This