
எல்லை மோதல்களுக்கு பிறகு உறவுகளை மீட்டெடுத்து வரும் சீனா – இந்தியா
சீனா மற்றும் இந்தியா இடையிலான உறவுகள் உலக வர்த்தகத்திற்கு மிகவும் முக்கியம் சீன ஜனாதிபதி சி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளும் சிறந்த நட்பை கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
2020 ஆம் ஆண்டு எல்லை மோதல்கள் மற்றும் பொருளாதார தடைகளுக்கு பிறகு, பெய்ஜிங் மற்றும் புது டில்லி உறவுகளை மீட்டெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருதரப்பு வர்த்தகம் ஆண்டுக்கு 130 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளதெனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கடந்த ஆண்டு சீனாவில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் உறவுகளை மேம்படுத்துவதாக உறுதியளித்திருந்தார்.
CATEGORIES இலங்கை
