இலங்கையில் அதிகரிக்கும் சிறுவர்கள் துஷ்பிரயோகம் – ஏழு மாதங்களில் 1126 முறைப்பாடு

இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் சிறுவர்கள் துஷ்பிரயோகம் தொடர்பான 1,000க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் இதனை தெரிவித்துள்ளார்.
இன்று (24) நாடாளுமன்றத்தில் தண்டனைச் சட்டம் (திருத்தம்) சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு விவாதத்தின் போது அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் இந்த தகவலை வெளியிட்டார்.
குடியிருப்புகள், பாடசாலைகள், தடுப்பு மையங்கள் மற்றும் பொது சாலைகள் உட்பட பல்வேறு இடங்களில் சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகிறார்கள் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
அமைச்சரின் கூற்றுப்படி, கடந்த ஆண்டு 1,350 சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளனர், அதே நேரத்தில் இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் மட்டும் 1,126 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.