தங்காலையில் ஐஸ் போதைப் பொருள் தயாரிக்கும் இரசாயனங்கள் மீட்பு

தங்காலையில் ஐஸ் போதைப் பொருள் தயாரிக்கும் இரசாயனங்கள் மீட்பு

தங்காலை, நெதொல்பிட்டிய பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் இன்று (07) காலை ஐஸ் என்ற போதைப்பொருள் உற்பத்தியில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அப்பகுதிவாசிகளிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், தங்காலை பொலிஸ் நிலைய அதிகாரிகள் இன்று காலை நெதொல்பிட்டிய – வெலிவென்ன குறுக்கு வீதியை ஒட்டிய நிலத்தில் சிறப்பு சோதனை நடத்தினர்.

அந்த நிலத்தில் வெள்ளை நிற இரசாயனங்கள் ஒரு தொகை கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அந்த இரசாயனங்கள் ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று மித்தெனியவில் உள்ள தலாவ பகுதியில் உள்ள நிலத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருள் உற்பத்தியில் பயன்படுத்தப்பட்ட இரசாயனங்களுடன் இந்த இரசாயனங்கள் மிகவும் ஒத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This