யோஷித, டெய்சிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபொரஸ்ட் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.
இரத்மலானாவின் சிரிமல் வத்த உயன மற்றும் தெஹிவளை பகுதிகளில் 80 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள நிலங்கள் மற்றும் சொத்துக்களை எவ்வாறு கையகப்படுத்தினார்கள் என்பதை வெளியிடத் தவறியதற்காக சட்டமா அதிபர் இந்த பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கைகளை தாக்கல் செய்துள்ளார்.