கொழும்பில் காற்றின் தரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்
கொழும்பைத் தவிர, பல பகுதிகளில் காற்றின் தரம் மிதமானதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) தெரிவித்துள்ளது.
இன்று காலை 06.00 மணி வரை கொழும்பில் காற்றின் தரக் குறியீடு 96 முதல் 106 வரை பதிவாகியிருந்தது.
மற்ற பகுதிகளில் இன்று காற்றின் தரக் குறியீடு 44 முதல் 106 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் நுவரெலியாவில் காற்றின் தரம் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.