ஐந்து ஆண்டுகளில் மாற்றங்களைச் செய்ய முடியாது – 15-20 ஆண்டுகள் ஆட்சியில் இருக்க வேண்டும்

இலங்கையில் விரும்பிய மாற்றங்களைக் கொண்டுவர 15-20 ஆண்டுகள் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சி தன்னிடம் கூறியதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா கூறியுள்ளார்.
ஐந்து ஆண்டுகளில் மாற்றங்களைச் செய்ய முடியாது என்றும், நான்கு அல்லது ஐந்து தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சியில் இருக்க வேண்டும் என்று அவர்கள் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் சீனாவிற்கு மேற்கொண்ட பயணத்தின் போது சீன கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடனான கலந்துரையாடல்களில் இந்தக் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.