கொத்து, பிரைட் ரைஸ் விலையில் மாற்றம்

கொத்து, பிரைட் ரைஸ் விலையில் மாற்றம்

நேற்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பல உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக மற்றும் பார் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைந்துள்ளதால் நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பல வகையான உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்‌ஷான் நேற்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அதன்படி, கறி, பிரைட் ரைஸ், கொத்து, பிரியாணி மற்றும் நாசி கோரெங் ஆகியவற்றுடன் கூடிய சாப்பாடு பொதியின் விலை 25 ரூபாயால் குறைக்கப்படும் என்று அவர் கூறினார்.

முட்டை ரொட்டி, பரோட்டா மற்றும் ஷார்ட் ஈட்ஸ் ஆகியவற்றின் விலையை 10 ரூபாய் குறைக்க முடிவு செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

CATEGORIES
TAGS
Share This