சீமெந்தின் விலை குறையும் சாத்தியம்

சீமெந்தின் விலை குறையும் சாத்தியம்

சீமெந்து மீதான தற்போதைய செஸ் வரியைக் குறைப்பதற்கான முன்மொழிவுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

இதன் மூலம் ஒரு மூட்டை சீமெந்தின் விலை சுமார் நூறு ரூபாய் குறையும் என்று நிதி அமைச்சின் அதிகாரிகள் குழுவிற்கு அறிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையிலான அரசாங்க நிதி பற்றிய குழு கடந்த 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கூடியபோது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Share This