Category: இலங்கை
அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 611 ஆக அதிகரிப்பு
பேரிடர் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று நண்பகல் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகளவான உயிரிழப்புகள் கண்டி மாவட்டத்தில் பதிவாகியுள்ளன. இதன்படி, கண்டி ... Read More
பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை பெற்றுக்கொடுக்க தலையிடுவோம் – ஜனாதிபதி
அனர்த்தத்திற்குப் பிறகு மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க, சாதாரண அரச பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒருங்கிணைந்த செயற்பாட்டு பொறிமுறை அவசியம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். கண்டி மாவட்ட செயலகத்தில் இன்று (06) முற்பகல் நடைபெற்ற ... Read More
தமிழ்நாட்டின் நிவாரண உதவி பொருட்கள் நாட்டிற்கு
டிட்வா புயல் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு இந்தியாவின் தமிழ்நாடு அரசு 950 மெட்ரிக் தொன் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய உதவிக் கப்பலை இலங்கைக்கு அனுப்பியுள்ளது. வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட ... Read More
மல்வத்து மகாநாயக தேரரை சந்தித்த ஜனாதிபதி
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (06) முற்பகல் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் மேற்கொண்டு, மல்வத்து மகாநாயக அதி வணக்கத்திற்குரிய, திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்தார். தற்போதைய அனர்த்த நிலைமை மற்றும் பாதிக்கப்பட்ட ... Read More
சுவிட்சர்லாந்திலிருந்தின் அனர்த்த நிவாரணப் பொருட்கள் அடங்கிய விமானம் நாட்டை வந்தடைந்தது
சுவிட்சர்லாந்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட அனர்த்த நிவாரணப் பொருட்கள் அடங்கிய விமானமொன்று இன்று (06) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த நிவாரணப் பொதிகளில் நீர் சுத்திகரிப்புக் கருவிகள் மற்றும் அவற்றின் செயற்பாட்டிற்கு தேவையான ... Read More
வெலிமடை – நுவரெலியா வீதி மீள திறக்கப்பட்டது
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டிருந்த வெலிமடை – நுவரெலியா வீதி போக்குவரத்திற்காக இன்றைய தினம் மீள திறக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துகள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த மாதம் 29 ஆம் திகதி இந்த வீதி மூடப்பட்டது. வெலிமடை ... Read More
பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை
பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாவதுடன் பலத்த மின்னல் ... Read More
மனிதாபிமான உதவித் தொகையை ஒரு மில்லியன் பவுண்டுகளாக அதிகரித்த பிரித்தானியா
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு வழங்கப்படும் மனிதாபிமான உதவித் தொகையை, பிரித்தானியா ஒரு மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகளாக அதிகரித்துள்ளது. இதற்கு முன்னதாக, இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம், 06 இலட்சத்து 75 ஆயிரம் ஸ்டெர்லிங் ... Read More
நிவாரணத்தில் ஊழலுக்கு இடமில்லை – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்
வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் வழங்கும் 25,000 ரூபா கொடுப்பனவில் எவ்வித ஊழலும் இடம்பெற இடமளிக்கப்படமாட்டாதென யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான விபரங்கள் அடங்கிய ... Read More
யாழ் மாவட்டத்தில் சைக்கிள்களை திருடிய நால்வர் கைது
யாழ்ப்பாணத்தில் சைக்கிள்களை திருடி வந்த கும்பலை சேர்ந்த நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். நகர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள்கள் காணாமற்போனமை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் ... Read More
கற்பிட்டி கடற்பரப்பில் பாரியளவான போதைப்பொருள் கண்டெடுப்பு
கற்பிட்டி கடற்பரப்பில் 03 உர மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.. கடற்படையினர் நேற்று இரவு (05) மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன்போது, 63 கிலோ 718 கிராம் ஐஸ் ... Read More
பம்பலப்பிட்டியில் வாகன விபத்து – ஐவர் வைத்தியசாலையில்
பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் இன்று (06) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளனர். வீதியின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 02 மோட்டார் வாகனங்கள் மீது, லொற ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பம்பலப்பிட்டி ... Read More












