கேப்டன் விஜய்காந்தின் ஓராண்டு நினைவுநாள் இன்று…நினைவிடத்தில் மக்கள் அஞ்சலி

கேப்டன் விஜய்காந்தின் ஓராண்டு நினைவுநாள் இன்று…நினைவிடத்தில் மக்கள் அஞ்சலி

கேப்டன் விஜய்காந்த் இறந்து இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகிறது.

இவர் நடிகராக இருந்து பின்னர் ஒரு அரசியல்வாதியாக மாறினார். மக்களுக்கு சேவையாற்றுவதிலும் உதவிகள் செய்வதிலும், உணவு அளிப்பதிலும் இவரை மிஞ்ச ஆளில்லை என்பதால் அனைவரும் இவரை கறுப்பு வைரம் என கொண்டாடினர்.

இந்நிலையில் சில நாட்களாக உடல் நலக் குறைவினால் அவதியுற்ற கேப்டன் கடந்த வருடம் இதே நாளில் காலமானார். அவரது பிரிவு ஒட்டுமொத்த மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

அவரது ஓராண்டு நினைவு நாளை முன்னிட்டு திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், தேமுதிக தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் அவரது நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Share This