அமெரிக்க பொருட்களை நிராகரிக்க தயாராகும் கனேடிய மக்கள் 

அமெரிக்க பொருட்களை நிராகரிக்க தயாராகும் கனேடிய மக்கள் 

கனேடிய மக்கள் ஏற்கனவே ட்ரம்பின் வரி விதிப்பு மற்றும் கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பதாக மிரட்டல் ஆகிய விடயங்களால் கடும் கோபத்திலிருக்கிறார்கள்.

இந்நிலையில், மீண்டும் கனேடிய பொருட்கள் மீதான வரிகளை உயர்த்தியுள்ளார் ட்ரம்ப்.

அதாவது, கனடாவிலிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்கள் மீது 35 சதவிகித வரிகள் விதிக்கப்பட உள்ளன.

ஆக, அமெரிக்காவை முழுமையாக புறக்கணிப்பதென கனேடியர்கள் பலர் முடிவு செய்துள்ளார்கள்.

எந்தப் பொருளை வாங்கினாலும், அது கனேடிய தயாரிப்புதானா என்பதை உறுதி செய்துகொள்ளப்போகிறேன் என்கிறார் ரீட்டா பெய்லி என்னும் பெண்.

ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியானதுமே அமெரிக்கப் பொருட்களைப் புறக்கணிக்கத் துவங்கிவிட்டதாகக் கூறும் லாரி ஷார்ப் என்பவர், தற்போது மீண்டும் ட்ரம்ப் வரிகளை உயர்த்தியுள்ளதைத் தொடர்ந்து தானும் தன் மனைவியும் கனேடிய பொருட்களை மட்டுமே வாங்குவதில் புரட்சியாளர்களாக மாறிவிட்டதாகத் தெரிவிக்கிறார்.

அதுமட்டுமின்றி, அமெரிக்க எல்லையிலிருந்து 20 நிமிட பயண தூரத்தில்தான் வாழ்கிறது லாரி குடும்பம்.

இருந்தாலும், இனி எல்லை கடப்பதில்லை என்கிறார் லாரி. உள்ளூர் சந்தியிலிருந்து மட்டுமே பொருட்களை வாங்க முழுமையாக முயற்சிக்கிறேன் என்று கூறும் கேரன் மவுண்ட், கனேடிய தயாரிப்புகள் கிடைக்காவிட்டால் வேறு நாட்டு பொருட்களை வாங்குவேனேயொழிய அமெரிக்கப் பொருட்களை வாங்கமாட்டேன் என்கிறார்.

இன்னும் பல கனேடியர்கள், இனி, வாழ்நாள் முழுவதும், அமெரிக்க பொருட்களை வாங்கப்போவதும் இல்லை, அமெரிக்காவுக்கு பயணிக்கப்போவதும் இல்லை, நாங்கள் கோபமாக இருக்கிறோம் என்கிறார்கள்.

Share This