
கனடா பிரதமர் மார்க் கார்னி இன்று இந்தியா பயணம்
கனடா பிரதமர் மார்க் கார்னி 4 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று மாலை இந்தியாவுக்குச் செல்ல உள்ளார்.
இந்தியா – கனடா இடையே நெருங்கிய நட்புறவு பல தசாப்தங்களாக தொடர்ந்துவந்த நிலையில், முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் ஆட்சிக்காலத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் திகதி கனடாவை சேர்ந்த காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த கொலையில் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக ஜஸ்டின் ட்ரூடோ பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவில் நெருக்கடிகள் எழுந்தன. இந்த நிலையில் தற்போதைய பிரதமர் மார்க் கார்னி இருநாடுகளுக்கும் இடையிலான உறவை மீண்டும் வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதன் பிரகாரம் இந்த விஜயம் அமைந்துள்ளதாக கனடா அரசாங்கம் கூறியுள்ளது.
