கனடியன் ஓபன் டென்னிஸ்: இறுதிப் போட்டியில் விக்டோரியா எம்போகோ அபார வெற்றி

கனடியன் ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விக்டோரியா எம்போகோ வெற்றிபெற்றுள்ளார்.
நேற்று இரவு நடந்த இறுதிப் போட்டியில் நவோமி ஒசாகா மற்றும் விக்டோரியா எம்போகோ ஆகியோர் விளையாடியிருந்தனர்.
இதில் நான்கு முறை கிராண்ட்ஸ்லாம் வென்ற நவோமி ஒசாகாவை இரண்டுக்கு ஆறு, ஆறுக்கு நான்கு, ஆறுக்கு ஒன்று என்ற செட் கணக்கில் தோற்கடித்து விக்டோரியா எம்போகோ வெற்றிபெற்றுள்ளார்.
கனடாவின் மான்ட்ரியல் நகரில் கனடியன் ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி ஐ.ஜி.ஏ அரங்கத்தில் நேற்று இரவு இடம்பெற்றிருந்து.
நான்கு கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றுள்ள நவோமி ஒசாகா இறுதிப் போட்டியில், 85ஆம் நிலை வீராங்கனையான கனடாவின் விக்டோரியா எம்போகோவை எதிர்த்து விளையாடியிருந்தார்.
எனினும் போட்டியில் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய விக்டோரியா எம்போகோ நவோமி ஒசாகாவை தோற்கடித்திருந்தார்.
இந்தி வெற்றியுடன், தரவரிசையிலும் விக்டோரியா பாரிய முன்னேற்றம் கண்டுள்ளார். இதன்படி, 85வது இடத்தில் இருந்த அவர் தற்போது 25வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.