கட்டுநாயக்க விமான நிலையத்தில் கனேடிய பிரஜை ஒருவர் போதைப் பொருளுடன் கைது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 400 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று காலை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து 12 கிலோ கிராம் 196 கிராம் நிறையுடைய ஹஷீஷ் மற்றும் ஐந்து கிலோ 298 கிராம் நிறையுடைய கொக்கேய்ன் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அவர் கனடாவிலிருந்து கத்தார், தோஹாவிற்கு போதைப்பொருள் தொகுதியைக் கொண்டு சென்று அங்கிருந்து, கட்டுநாயக்க விமான நிலையத்தை
வந்தடைந்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கனேடிய பிரஜையான 52 வயதுடையவர் எனவும் அவர் ஒன்றாரியோ நகரில் வசிப்பவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு மேற்கொண்டுள்ளது