குடியேற்ற கொள்கையை கடுமையாக்கும் கனடா

குடியேற்ற கொள்கையை கடுமையாக்கும் கனடா

கனடா அரசாங்கம் எதிர்வரும் சில ஆண்டுகளில் நாட்டுக்குள் அனுமதிக்கும் தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை பெரிதும் குறைக்க திட்டமிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு, 385,000 தற்காலிக குடியிருப்பாளர்கள் மட்டுமே நாட்டுக்குள் அனுமதிக்கப்படவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த சில ஆண்டுகளில் காணப்பட்ட அதிக எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது கணிசமான குறைவு இந்த ஆண்டு ஏற்பட்டுள்ளதாக கனடா தெரிவித்துள்ளது.

அந்நாட்டு நிதியமைச்சரின் கூற்றுப்படி, இந்த நடவடிக்கை தற்காலிக குடியேற்றத்தை நிரந்தர குடியேற்றமாக மாற்றுவதற்கான முயற்சி என்று கூறப்படுகிறது.

இதன் நோக்கம், குடியேற்ற அமைப்பை இன்னும் கட்டுப்படுத்தப்பட்டநிலையான முறையில் பராமரிப்பதாகும்.

அதே நேரத்தில், சர்வதேச மாணவர்களின் வருகை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 60 சதவீதம் குறைந்துள்ளது.

முதற் கட்டமாக அடுத்த ஆண்டில், 385,000 பேருக்கே கனடாவுக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட உள்ள நிலையில்,  இவர்களுக்கு தற்காலிக குடியிருப்பு அந்தஸ்துகளே வழங்கப்படவுள்ளன.கனடாவில் ஏற்கனவே குடிபுகுந்துள்ள தற்காலிக குடியிருப்பாளர்களுக்கு நிரந்த வதிவிடம் வழங்கும் நோக்குடனே,புதிதாக வருவோரின் தொகையை மட்டுப்படுத்த கனடா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது கடந்த சில ஆண்டுகளில் காணப்பட்ட அதிக எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது கணிசமான குறைவு என்று தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு நிரந்தர வதிவிட வசதிகள் வழங்கப்பட்ட பின்னர்,எதிர்காலத்தில் கனடாவின் குடியேற்ற கொள்கையில் இறுக்கமான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படவுள்ளன.

CATEGORIES
Share This