அமைச்சரவையில் விரைவில் மாற்றம்

அமைச்சரவையில் விரைவில் மாற்றம்

அமைச்சரவையில் சில மாற்றங்களை செய்வது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அறிய முடிகிறது.

அமைச்சுகள் மற்றும் அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் உட்பட ஏனைய அரச கட்டமைப்புகளின் வினைதிறனை அதிகரிக்கும் நோக்கில் இந்த மாற்றத்தை மேற்கொள்ள ஆலோசனைகள் இடம்பெற்று வருகின்றன.

அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் அரச நிறுவனங்களின் உயர் பதவிகளிலும் பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள அரசாங்கம் உத்தேசியத்துள்ளது.

இதுதொடர்பான கோரிக்கைகளை அரசாங்கத்தின் மூத்த அமைச்சரான பிமல் ரத்நாயக்க உட்பட பலர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் முன்வைத்துள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் 25 இற்கும் குறைவான அமைச்சர்களுடனேயே இயங்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது கூறியிருந்தார்.

என்றாலும், 22 அமைச்சர்களுடனேயே அமைச்சரவை செயல்படுகிறது. இன்னமும் 3 அமைச்சர்கள் வரை நியமிப்பதற்கான சந்தர்ப்பம் அரசாங்கத்துக்கு உள்ள சூழலிலேயே அமைச்சரவை மாற்றம் குறித்த ஆலோசனைகள் இடம்பெற்று வருகின்றன.

Share This