காலை உணவு கொடுப்பனவை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

காலை உணவு கொடுப்பனவை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

2025 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பகால குழந்தை அபிவிருத்தி நிலையங்கள் மற்றும் முன்பள்ளி சிறார்களுக்கு வழங்கப்படும் காலை உணவு கொடுப்பனவை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வியாழக்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

இதில் கருத்து வெளியிட்ட அமைச்சர் மேலும் கூறியதாவது,

இதன்படி, ஒரு பிள்ளைக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் 60 ரூபாயை 100 ரூபாயாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அத்துடன், உணவு கொடுப்பனவு பெறும் முன்பள்ளி சிறுவர்களின் எண்ணிக்கையை 155,000ஆக அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

Share This