பொருளாதார கணக்கெடுப்புக்கு அமைச்சரவை ஒப்புதல்

பொருளாதார கணக்கெடுப்புக்கு அமைச்சரவை ஒப்புதல்

2025 ஆம் ஆண்டில் விவசாய நடவடிக்கைகள் மற்றும் 2026 ஆம் ஆண்டில் விவசாயம் சாராத நடவடிக்கைகளை உள்ளடக்கிய பொருளாதார கணக்கெடுப்பை நடத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை கடைசியாக 2013/14 ஆம் ஆண்டில் பொருளாதார கணக்கெடுப்பு நடத்தியிருந்தது.

2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் பொருளாதார கணக்கெடுப்பை நடத்தவும், விவசாயம் மற்றும் விவசாயம் சாராத பொருளாதார நடவடிக்கைகளை இரண்டு தனித்தனி கட்டங்களாக நடத்தவும், அந்தக் கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட தரவுகளைப் புதுப்பிக்கவும் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை திட்டமிட்டுள்ளது.

இதன் பிரகாரம் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி சமர்ப்பித்த முன்மொழிவை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

Share This