
கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கிப் பயணித்த பேருந்து விபத்து – சாரதி உயிரிழப்பு
கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கிப் பயணித்த பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் பேருந்தின் சாரதி உயிரிழந்துள்ளார்.
ஹல்துமுல்லை – ஊவதென்ன பகுதியில் இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் பேருந்து பயணித்துக் கொண்டிருந்த போது, சாரதி ஆசனத்திற்கு அருகிலுள்ள கதவு திடீரெனத் திறந்துள்ளது.
அந்த நேரத்தில் சாரதி கதவை மூட முயற்சி செய்துள்ளார். இதன்போது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த மண் திட்டில் மோதி வீதியில் கவிழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் மேலும் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் பேருந்தின் நடத்துனர், ஒரு சிறுவன் மற்றும் ஒரு பெண் அடங்குவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து காரணமாக வீதியின் ஒரு வழித்தடம் தடைப்பட்டுள்ளது.
இந்நிலையில் சீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து நடந்த நேரத்தில் சாரதி ஆசனப்பட்டி அணிந்திருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
