கேகாலை-அவிசாவளை வீதியில் கவிழ்ந்த பஸ் – 42 பேர் வைத்தியசாலையில்

கேகாலை-அவிசாவளை வீதியில் பஸ்ஸொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் காயமடைந்துள்ளனர்.
தெஹியோவிட்ட பகுதியில் இன்று இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதுது.
விபத்தில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.