ராஜஸ்தானில் தீப்பிடித்த பேருந்து – 20 பேர் உயிரிழப்பு

ராஜஸ்தானில் தீப்பிடித்த பேருந்து – 20 பேர் உயிரிழப்பு

ராஜஸ்தானில் தனியார் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்த விபத்தில்20 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஜெய்சால்மரில் இருந்து 57 பயணிகளுடன் பயணித்த பேருந்து தையத் கிராமத்திற்கு அருகில் வைத்து தீப்பிடித்துள்ளது.

மிகக் குறுகிய நேரத்தில் பேருந்து முழுவதும் தீ பரவியது.  தகவலறிந்து விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதன்போது, பலர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி இழப்பீடுகளையும் அறிவித்துள்ளார்.

இதன்படி, உயிரிழந்தவர்களின் ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதம மந்திரி பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This