யாத்ரீகர் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து – ஏழு பேர் படுகாயம்

பதுளை – மஹியங்கனை சாலையில் உள்ள துன்ஹிட சந்திப்பில் இன்று (15) காலை 7.15 மணியளவில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது.
யாத்ரீகர் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து நிறுத்தப்பட்டிருந்த லொரியுடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
பேருந்தில் சுமார் 30 பேர் பயணம் செய்ததாகவும், அவர்களில் சுமார் 7 பேர் காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
பிரேக் செயலிழந்ததால் பேருந்தின் ஓட்டுநரால் பேருந்தை கட்டுப்படுத்த முடியவில்லை எனவும் பேருந்து நிறுத்தப்பட்டிருந்த லொரியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.