பேருந்தும் லொறியும் மோதி கோர விபத்து – பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 15 பேர் படுகாயம்

பேருந்தும் லொறியும் மோதி கோர விபத்து – பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 15 பேர் படுகாயம்

ஹொரணை – இரத்தினபுரி வீதியில் இங்கிரிய மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் தனியார் பேருந்தும்  லொறியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் லொறியின் சாரதி மற்றும் உதவியாளரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் இங்கிரிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், லொறி உதவியாளர் உட்பட பல பாடசாலை மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக ஹொரணை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பேருந்து ஹொரணை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகவும், லொறி இங்கிரிய நோக்கிச் சென்று கொண்டிருந்த நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இங்கிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This