
கொத்மலை பிரதேச சபையின் பட்ஜட் நிறைவேற்றம்
கொத்மலை பிரதேச சபையின் 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாதீடு தொடர்பான கொத்மலை பிரதேச சபைக் கூட்டம் அதன் தவிசாளர் தலைமையில் இன்று முற்பகல் நடைபெற்றது.
இதன்போது தேசிய மக்கள் சக்தி மற்றும் இதொகா உறுப்பினர்கள் பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஐக்கிய மக்கள் சக்தி உட்பட சில எதிரணி உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.
கொத்மலை பிரதேச சபையில் 55 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 30 பேர் ஆதரவாக வாக்களித்தனர்.

TAGS கொத்மலை பிரதேச சபை
