மக்கள் மத்தியில் ஆதரவை இழந்த பிரித்தானிய பிரதமர்

மக்கள் மத்தியில் ஆதரவை இழந்த பிரித்தானிய பிரதமர்

பிரித்தானியாவில் பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் (Sir Keir Starmer) மீது மக்கள் அதிருப்தி கொண்டுள்ளதாக புதிய கருத்து கணிப்பொன்று தெரிவித்துள்ளது.

தி இன்டிபென்டன்ட் நடத்திய சமீபத்திய கருத்துக் கணிப்பில், 2024 ஆம் ஆண்டில் தொழிற்கட்சிக்கு வாக்களித்தவர்களில் 38 சதவீதமானோர் அடுத்த வருடம் வேறு ஒரு தலைவருக்கு வாக்களிக்கவுள்ளதாக சமிக்ஞை செய்துள்ளனர்.

தொழிற்கட்சி வாக்காளர்கள் சர் கீர் ஸ்டார்மர் (Sir Keir Starmer) வரலாற்றில் மிக மோசமான தொழிற்கட்சி பிரதமராக மதிப்பிட்டுள்ளதாகவும், அடுத்ததாக டோனி பிளேர் (Tony Blair) மோசமான அரசியல் தலைவராக இடம்பிடித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை கிரேட் மென்செஸ்டர் மேயரான ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) மக்களின் அடுத்த தெரிவாக காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

19 சதவீதமான தொழிற்கட்சி ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )