
ஆஸ்திரேலியாவில் பிரித்தானிய பிரஜைக்கு சிறைத்தண்டனை
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில், மதுபோதையில் மின்சார ஸ்கூட்டரை ஓட்டி, 51 வயதான இரு குழந்தைகளின் தந்தையை விபத்தில் கொன்ற 25 வயதுடைய பிரித்தானியப் பயணி Alicia Kemp என்பவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் நான்கு வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இந்தக் குற்றத்தைச் செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார். வழங்கப்பட்ட தண்டனையில், இரண்டு வருடங்கள் பிணை இல்லாமல் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் மேற்கு ஆஸ்திரேலியாவில் வாடகை ஸ்கூட்டர் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வழிவகுத்ததுடன், மின்சார ஸ்கூட்டர்களின் பாதுகாப்பு குறித்த தேசிய விவாதத்தையும் தூண்டியுள்ளது
TAGS ஆஸ்திரேலியா
