சாகோஸ்  தீவுகளின் இறையாண்மையை மொரீஷியஸிடம் ஒப்படைக்கும் பிரித்தானியாவின் திட்டம் முட்டாள்தனமானது –  ட்ரம்ப்

சாகோஸ் தீவுகளின் இறையாண்மையை மொரீஷியஸிடம் ஒப்படைக்கும் பிரித்தானியாவின் திட்டம் முட்டாள்தனமானது – ட்ரம்ப்

சாகோஸ் (Chagos) தீவுகளின் இறையாண்மையை மொரீஷியஸிடம் ஒப்படைக்கும் பிரித்தானியாவின் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்ட அவர், இந்த முடிவை “மிகப்பெரிய முட்டாள்தனமான செயல்” என தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா அந்தப் பகுதியில் உள்ள இராணுவத் தளத்தை குத்தகைக்கு எடுக்கும் நிலையில், இறையாண்மையை ஒப்படைக்கும் ஒப்பந்தம் அமெரிக்கா கிரீன்லாந்தை கைப்பற்ற விரும்புவதற்கான காரணங்களில் ஒன்றாகும் என ட்ரம்ப் கூறியுள்ளார்.

“எங்கள் ‘புத்திசாலித்தனமான’ நேட்டோ நண்பரான ஐக்கிய இராச்சியம், எந்தத் தேவையும் இன்றி, முக்கியமான அமெரிக்க இராணுவத் தளமான டியாகோ கார்சியா
(Diego Garcia) தீவை மொரீஷியஸிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, ட்ரம்ப் நிர்வாகம் முன்னதாக இந்த ஒப்பந்தத்தை ஆதரித்திருந்தது. கடந்த மே மாதம், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, இதை சிறப்புமிக்க சாதனை என பாராட்டியிருந்தார்.

பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர், இறையாண்மை ஒப்படைக்கப்பட்ட பின்னர், பிரித்தானிய–அமெரிக்க இராணுவத் தளத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுப்பதற்காக பிரித்தானியா ஆண்டுக்கு £101 மில்லியன் செலுத்த வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மருக்கு மிகவும் சங்கடமானதும், அவமானகரமானதுமான ஒன்றாக மாறியுள்ளது என ருபர் ஹென்றி ஜெஃப்மேன் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )