
பிரித்தானியாவின் முதல் ஆசியப் பெண் மேயர் காலமானார்
பிரித்தானியாவின் முதல் ஆசியப் பெண் மேயர் என்ற பெருமைக்குரிய மஞ்சுளா சூட் தமது 80ஆவது வயதில் நேற்று லெய்செஸ்டர் நகரில் காலமானார்.
லெய்செஸ்டர் நகரின் ஸ்டோனிகேட் வட்டார உறுப்பினராகவும், உதவி மேயராகவும் நீண்ட காலம் பணியாற்றிய அவர், அந்தச் சமூகத்திற்கு ஆற்றிய தன்னலமற்ற சேவைகளுக்காகப் பெரிதும் மதிக்கப்படுபவராவார்.
1970 களில் இந்தியாவிலிருந்து லெய்செஸ்டர் பகுதிக்கு குடிபெயர்ந்த மஞ்சுளா, ஆரம்பத்தில் ஆசிரியராகப் பணியாற்றி, பின்னர் தனது கணவர் போலின் மறைவுக்குப் பிறகு அரசியலில் நுழைந்தார்.
1996 ஆம் ஆண்டில் நகரின் முதல் இந்துப் பெண் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 2008 ஆம் ஆண்டில் பிரித்தானியாவின் முதல் ஆசியப் பெண் மேயராகப் பொறுப்பேற்று வரலாறு படைத்தார்.
மஞ்சுளா சூட்டின் மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
