பிரிட்டனின் முடிவு ஆபத்தானது: இஸ்ரேல் கடும் கண்டனம்

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கப் போவதாக பிரிட்டன் அறிவித்துள்ளதற்கு இஸ்ரேல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள், அதன் பாதிப்புகள் இன்னமும் ஓயவில்லை. தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்து விட்டது.
இந்நிலையில் பிரிட்டனின் முடிவுக்கு இஸ்ரேல் பிரதமர் பநெதன்யாகு கடும் கண்டனத்தையும், அதிருப்தியையும் வெளியிட்டு உள்ளார்.
‘ பிரிட்டனின் இந்த முடிவு பிற்காலத்தில் அவர்களையே தாக்கக்கூடும். இஸ்ரேல் எல்லையில் ஜிகாதி நாடு இன்று உருவானால் நாளை அது பிரிட்டனுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும்.
பாலஸ்தீனத்துக்கு ஆதரவான இந்த செயல் பாதிப்பை ஏற்படுத்தும். பயங்கரவாதிகளை சமாதானப்படுத்தும் உங்கள் நடவடிக்கை எப்போதும் தோல்விதான். அது உங்களுக்கும் தோல்வியை தரும். அது நடக்காது.” – என்றும் இஸ்ரேல் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.