பிரிட்டனின் விமானம் தாங்கிய கப்பல்கள் வெறும் ‘பொம்மைகள்’

பிரிட்டனின் விமானம் தாங்கிய கப்பல்கள் வெறும் ‘பொம்மைகள்’

ஈரான் விவகாரத்தில் ‘எதுவும் செய்யவில்லை’ என நேட்டோ நட்பு நாடுகளை கடுமையாக விமர்சித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பிரிட்டனின் விமானம் தாங்கி கப்பல்கள் வெறும் ‘பொம்மைகள்’ எனக் கூறியுள்ளார்.

பிரிட்டனின் இரண்டு விமானம் தாங்கி கப்பல்களான, எச்.எம்.எஸ் குயின் எலிசபெத் மற்றும் எச்.எம்.எஸ் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ், ஆகியவை “பொம்மைகளை” விட சற்றே சிறந்தவை என்றும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் போருக்கு பிரிட்டன் இராணுவ உதவி வழங்காதது குறித்த டிரம்ப் மீண்டும் விமர்சித்துள்ளதுடன், அமெரிக்காவிற்கு ஆதரவளிக்க நேட்டோ நாடுகள் எந்தவொரு உதவியையும் செய்யவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

டிரம்பின் இந்த கருத்து பிரிட்டனின் பாதுகாப்பு துறையினர் மற்றும்  இராணுவத்தினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )