கிரேன்ஜ்மவுத் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் குறித்து பிரித்தானியாவின் புதிய தீர்மானம்

ஸ்காட்லாந்தின் கிரேன்ஜ்மவுத் (Grangemouth) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு £14.5 மில்லியன் பவுண்ட்கள் முதலீட்டை வரவு செலவுத்திட்டத்தில் அறிவிக்க உள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த சுத்திகரிப்பு நிலையம் 100 ஆண்டுகளாக இயங்கி வந்தது, ஆனால் ஏப்ரல் மாதத்தில் கச்சா எண்ணெய் செயலாக்கத்தை நிறுத்தியது.
கிரேன்ஜ்மவுத்துக்கு உறுதியளிக்கப்பட்ட £200 மில்லியனை வழங்கத் தவறியதாக அரசாங்கம் மீதும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் அறிவிக்கப்படவுள்ள புதிய முதலீடு வேலைவாய்ப்புகளை இலக்காகக் கொண்டது என ஸ்காட்டிஷ் செயலாளர் டக்ளஸ் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.
சுமார் £12.5 மில்லியன் பவுண்டுகள் புதிய நிதியாகவும், மீதமுள்ள £2 மில்லியன் தற்போதைய எரிசக்தி மற்றும் நிகர பூஜ்ஜிய நிதியிலிருந்து வரும் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கிரேன்ஜ்மவுத்தை குறைந்த கார்பன் எரிசக்தி மையமாக மாற்றும் ‘ப்ராஜெக்ட் வில்லோ’ அறிக்கையில், புதிய தொழில்களை உருவாக்க பல யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் உள்ளூர் மக்கள் மற்றும் தொழிலாளர்கள், வாக்குறுதிகள் மட்டுமல்ல செயற்பாடுகளும் தேவை என வலியுறுத்துகின்றனர்.
