
மனிதாபிமான உதவித் தொகையை ஒரு மில்லியன் பவுண்டுகளாக அதிகரித்த பிரித்தானியா
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு வழங்கப்படும் மனிதாபிமான உதவித் தொகையை, பிரித்தானியா ஒரு மில்லியன்
ஸ்டெர்லிங் பவுண்டுகளாக அதிகரித்துள்ளது.
இதற்கு முன்னதாக, இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம், 06 இலட்சத்து 75 ஆயிரம் ஸ்டெர்லிங் பவுண்டுகள் அளவிலான உதவியை அறிவித்திருந்தது.
பிரித்தானிய அரசால் வழங்கப்பட்டுள்ள இந்த அவசர பேரிடர் உதவிகள், கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
