இரு விலைகளில் விற்பனை செய்யப்படும் பாண்

நாட்டின் பல பிரதேசங்களில் பாண் இரு விலைகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
கோதுமை மாவின் விலையை 10 ரூபாவால் குறைப்பதாக தீர்மானிக்கப்பட்டதையடுத்து பாணின் விலையையும் 10 ரூபாவால் குறைக்க முடியும் என பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது.
எனினும், சில பிரதேசங்களில் வியாபாரிகள் பாண் ஒன்றை 140 ரூபாய்க்கும் இன்னும் சில வியாபாரிகள் பழைய விலைக்கும் விற்பனை செய்து வருகின்றமை தெரியவந்துள்ளது.
புதிய விலைக்கு கோதுமை மா தொகையை வாங்கிய பேக்கரி உற்பத்தியாளர்கள் புதிய விலைக்கு பாணை விற்பனை செய்து வருவதாகவும், பழைய தொகை விலைக்கு கோதுமை மாவை வாங்கிய பேக்கரி உற்பத்தியாளர்கள பழைய விலைக்கே பாணை விற்பனை செய்து வருகின்றனர்.
இதேவேளை, பழைய விலைக்கு வாங்கிய கோதுமை மா தொகை நிறைவடையும் வரையில் பாணை புதிய விலைக்கு விற்பனை செய்ய முடியாது எனவும் பேக்கரி உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும், பாணின் விலையை 10 ரூபாவால் குறைத்தாலும், ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை குறைக்க முடியாது என பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.