புதிய மோட்டார் சைக்கிளின் விலை ஒரு மில்லியன் ரூபா

இறக்குமதி செய்யப்படவுள்ள முதல் தொகுதி புதிய மோட்டார் சைக்கிளின் விலை சுமார் ஒரு மில்லியன் என தெரிவிக்கபடுகிறது.
டேவிட் பீரிஸ் மோட்டார் நிறுவனம் தங்கள் உத்தியோகப்பூர்வ வலைத்தளத்தில் புதிய பல்சர் N160 மோட்டார் சைக்கிளின் விலை 934,950 ரூபா என அறிவித்துள்ளது.
இதேவேளை, புதிய டிஸ்கவர் 125 DRL மோட்டார் சைக்கிளின் விலை 731,950 ரூபா எனவும் புதிய CT 100 ES
மோட்டார் சைக்கிளின் விலை 637,950 என அறிவிக்கப்பட்டுள்ளது.