
பொண்டி துப்பாக்கிச்சூடு – லண்டனைச் சேர்ந்த சிறுமி உட்பட இருவர் உயிரிழப்பு
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரின் பொண்டி (Bondi) கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தவர்களில் லண்டனில் பிறந்த ரப்பி ஒருவரும் 10 வயது சிறுமியும் அடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
யூதர்களின் நிகழ்வொன்றை இலக்கு வைத்து நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டதாக சந்தேகிக்கப்படும இந்த துப்பாக்கி பிரயோக சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்துனர்.
தந்தை மற்றும் மகன் என இரண்டு துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட இந்த தாக்குதலில் லண்டனைச் சேர்ந்த 41 வயதான, ரப்பி எலி ஸ்க்லாங்கர் என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரான 50 வயதுடைய நபர் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
அத்துடன் 24 வயதான நவீத் அக்ரம் என பெயரிடப்பட்ட மற்றொரு துப்பாக்கிதாரி ஆபத்தான நிலையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
குறித்த தாக்குதல் பல மாதங்களாகத் திட்டமிடப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அவுஸ்திரேலிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
