ரயிலில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் உடல் காணாமற்போயுள்ளதாக தகவல்

ரயிலில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் உடல் காணாமற்போயுள்ளதாக தகவல்

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த குழந்தையொன்றின் உடல் காணாமற் போயுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெமட்டகொடை பொலிஸ் பிரிவில் உள்ள மாளிகாவத்தை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலொன்றின்
கழிப்பறையிலிருந்து கடந்த மாதம் முதலாம் திகதி குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் தெமட்டகொடை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில், நீதவானின்
உத்தரவின் பேரில், குழந்தையின் உடல் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டது.

கடந்த 29 ஆம் மற்றும் 31 ஆம் திகதிகளில் மரண பரிசோதனை நடத்துவதற்காக தெமட்டகொடை பொலிஸ்நிலைய அதிகாரிகள் கொழும்பு தேசிய வைத்தியசாலை பிணவறைக்குச் சென்று,விசாரணை மேற்கொண்ட போது, குறித்த குழந்தையின் உடல் காணாமற் போயுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், இது குறித்த மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This