தலை, கை, கால்கள் இல்லாமல் மீட்கப்பட்ட சடலம் – மாரவில பொலிஸார் தீவிர விசாரணை

மாரவில முது கட்டுவ கடற்கரையில் ஒரு சடலம் காணப்படுவதாக கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து மாரவில காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
உடலில் தலை, கைகள் மற்றும் கால்கள் எதுவும் இல்லை என்றும், நீல நிற ஷார்ட்ஸுடன் உடலின் ஒரு பகுதி மட்டுமே எஞ்சியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த உடல் ஒரு ஆணுடையதாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இருப்பினும், மாரவில செயல் நீதவான் முதற்கட்ட விசாரணைகளை நடத்த உள்ளார், சம்பவம் தொடர்பில் மாரவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.