அவுஸ்திரேலியாவில் சூறாவளி காரணமாக பல பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு

அவுஸ்திரேலியாவில் எல்ஃபிரட் சூறாவளி காரணமாக பல பகுதிகளில் மின்சாரம் துண்டிசுக்கப்பட்டுள்ளது.
சூறாவளி காரணமாக வணிக கட்டிடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் பாரியளவில் சேதமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனர்த்த நிலைமை காரணமாக மூடப்பட்ட 1,000 இற்கும் மேற்பட்ட பாடசாலைகளை நாளை முதல் கட்டம் கட்டமாக திறப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் அனர்த்த நிலைமைகளால் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச
ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.