எல்லையில் பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் பூதவுடல்கள் அஞ்சலிக்காக வைப்பு

எல்லையில் பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் பூதவுடல்கள் அஞ்சலிக்காக வைப்பு

எல்லயில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் பூதவுடல்கள் மக்கள் அஞ்சலிக்காக தங்காலை நகர சபை மண்டபத்தில் இன்று (06) வைக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்களில் அநேகர் தங்காலை நகர சபை ஊழியர்களாகும். பிரதேசத்தில் வெள்ளைக் கொடிகளும் பறக்க விடப்பட்டுள்ளன.

எல்ல – வெல்லவாய வீதியில் 24வது மைல்கல் அருகில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 15 பேர் உயிரிழந்திருந்தனர்.

மேலும் 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இறந்தவர்களில் 9 பெண்களும் 6 ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
Share This