சனி பகவானின் ஆசியைப் பெற்ற இந்த ராசியினருக்கு பணப் பற்றாக்குறையே இருக்காது

12 ராசிகளும் ஒவ்வொரு கிரகங்களால் ஆளப்படுகின்றன. அதன்படி ஒவ்வொரு ராசியும் அதன் குணாதிசயங்களின்படி தாக்கம் செலுத்தும்.
சில ராசிகள் சனி பகவானின் ஆசியோடு சம்பாதிப்பதில் கில்லாடிகளாக இருப்பார்கள். மேலும் இவர்களுக்கு வாழ்க்கையில் பணப் பிரச்சனையே வராது. அதன்படி சனி பகவானின் ஆசியைப் பெற்ற ராசிக்காரர்கள் யாரெனப் பார்ப்போம்.
கன்னி
பிறவியிலேயே சனி பகவானின் ஆசியைப் பெற்றவர்கள் கன்னி ராசியினர். இவர்கள் பணம் சம்பாதிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்கள். தொலைநோக்கு பார்வைக் கொண்டவர்கள். பணத்தை தேவையற்ற விடயங்களுக்கு செலவு செய்ய மாட்டார்கள். எதிர்காலத்துக்கு தேவையான செல்வத்தை குவிப்பார்கள். தொழிலில் கொடிகட்டி பறக்கும் திறன் கொண்டவர்கள்.
மகரம்
மகர ராசியினர் பிறவியிலேயே சனி பகவானின் ஆசியைப் பெற்றவர்கள். மேலும் இவர்கள் பணம் சம்பாதிப்பதில் கில்லாடிகள் தங்கள் வேலைகளில் முன்னேறி சென்று கொண்டிருப்பார்கள். சுய மரியாதை அதிகம் கொண்டவர்கள்.
கும்பம்
பணத்தை சம்பாதிப்பதில் கும்ப ராசியினர் கில்லாடிகள். கடின உழைப்பாளிகள். விடாமுயற்சியுடன் இருப்பார்கள். இவர்களுக்கு பணப் பற்றாக்குறை இருக்காது. இவர்களிடம் சனி பகவானின் குணங்கள் காணப்படும்.