இலங்கையில் பிறப்பு விகிதம் வீழ்ச்சி – ஐநா அறிக்கையில் தகவல்

இலங்கையில் பிறப்பு விகிதம் வீழ்ச்சி – ஐநா அறிக்கையில் தகவல்

இலங்கையின் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. நாட்டின் தற்போதைய பிறப்பு விகிதம் 1.9 ஆக உள்ளது. எனினும், இந்த எண்ணிக்கை 2.1 ஆக இருக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் தெரிவித்துள்ளது.

இலங்கை இளைஞர்களுடனான கலந்துரையாடல்களில், பங்கேற்றவர்களில் பெரும்பாலோர் ஒரு குடும்பத்தைத் தொடங்க விரும்புவதாகக் கூறினர், ஆனால் பொருளாதார சிக்கல்கள் இதற்கு தடையாக இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளில் இலங்கையில் வாழ்க்கைச் செலவு இரட்டிப்பாகியுள்ளது என்றுஎன்று ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியத்தின் பிரதிநிதி கூலி அடெனியி தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாக, வீட்டுவசதி மற்றும் உணவுக்கான செலவும் அதிகரித்துள்ளது, மேலும் ஒரு குடும்பத்தைத் தொடங்க நினைத்த இளைஞர்கள் அதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் குழந்தை பிறக்கும் வயதுடையவர்களில் சுமார் 20 வீதம் பேர் தாங்கள் விரும்பும் குழந்தைகளின் எண்ணிக்கையைப் பெற முடியாது என்று நம்புவதாக ஐ.நா. அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

Share This