பிமல் ரத்நாயக்க சபாநாயகரிடம் விடுத்த கோரிக்கை

சட்டத்தரணி ஸ்வஸ்திகா அருளிங்கத்துக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பில் நிலையியற் கட்டளைகளின்படி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் கோரிக்கை விடுத்தார்.
இன்று (17) நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கும் சந்தர்ப்பத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுஅவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.
மேலும் கருத்து தெரிவித்த சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க,
“இந்த சம்பவம் நாடாளுமன்றத்தில் நடந்தது எங்களுக்கு தெரியும்.
சட்டத்தரணி ஸ்வஸ்திகா அருளிங்கத்தை கடுமையாக அவமதிக்கும் வகையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தையும் அவர் தெரிவித்திருக்கிறார். எங்களுக்கும் தெரியும்.
இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து, பொருத்தமான நிலையியற் கட்டளையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சபாநாயகரை நான் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.