காதலி குறித்து மனந்திறந்தார் பில் கேட்ஸ்
![காதலி குறித்து மனந்திறந்தார் பில் கேட்ஸ் காதலி குறித்து மனந்திறந்தார் பில் கேட்ஸ்](https://oruvan.com/wp-content/uploads/2025/02/Screenshot-2025-02-07-160424.png)
மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் ( 69).தம் காதலி பாவ்லா ஹர்ட் (62)உடனான உறவு குறித்து முதன்முறையாக மனந்திறந்துள்ளார்.
அண்மையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், தமது காதல் வாழ்க்கை குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
“பாவ்லா எனும் பெயர் கொண்ட உண்மையான காதலியைப் பெற்றிருப்பதற்கு நான் அதிர்ஷ்டசாலி. நாங்கள் இன்பமாக உள்ளோம். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கு நாங்கள் சென்றோம். ஒன்றாகச் சேர்ந்து நிறைய அற்புதமான அனுபவங்களைப் பெறுகிறோம்,” என்றார் கேட்ஸ்.
கொடை வள்ளலும் மேம்பாட்டாளருமான பாவ்லா, முன்னதாக ஆரக்கல் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி மார்க் ஹர்ண்டுடன் திருமணமானவர். 2019 அக்டோபரில் மார்க் காலமானார்.
இந்நிலையில், கேட்சும் பாவ்லாவும் 2022ல் முதன்முறையாக பொதுவெளியில் ஒன்றாக தோன்றினார். 2023 தொடக்கத்தில் தங்கள் காதல் உறவை அவர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள், முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளிலும் இவர்கள் இருவரும் ஒன்றாக கலந்துகொண்டனர்.