பென்ஜி ஆடைத் தொழிற்சாலை சம்பவம் – ஒருவர் கைது

பென்ஜி ஆடைத் தொழிற்சாலை சம்பவம் – ஒருவர் கைது

பிங்கிரியில் உள்ள பென்ஜி ஆடைத் தொழிற்சாலையில் நேற்று (30) இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் எட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட உள்ளனர்.

விஜயசிறி பஸ்நாயக்க குளியாப்பிட்டிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிங்கிரிய- விலத்தவ பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு நேற்று (30) சென்ற தேசிய மக்கள் சக்தியின் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க மற்றும் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான் மீது இலஞ்சம் பெற முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, தனது உத்தியோகபூர்வ முகநூல் கணக்கில் கடந்த 30ஆம் திகதியன்று தேசிய மக்கள் சக்தியின் குறித்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக தனியார் ஆடை தொழிற்சாலையின் வாயிலுக்கு அருகில் ஆர்ப்பாட்டம் செய்வதையும், இலஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டுவதையும் காட்டும் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This