ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் செவ்வாழை

பொதுவாகவே பழங்கள் உண்பது உடல் நலத்துக்கு ஏற்றது. அதிலும் செவ்வாழைப்பழம் மிகவும் நன்மை பயக்கும். செவ்வாழைப்பழம் உண்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் எனப் பார்ப்போம்.
- செவ்வாழையில் உள்ள குறைவான கலோரிகள் மற்றும் நார்ச்சத்தின் காரணமாக உடல் எடை குறையும்.
- சருமத்தில் ஏற்படும் வடுக்கள், துளைகள் போன்றவற்றை சரி செய்கிறது.
- இரத்தசோகை உள்ளவர்கள் செவ்வாழைப்பழம் சாப்பிடுவதால் சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
- இதில் உள்ள பொட்டாசியம் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்கிறது.
- நீண்டநாள் இருந்து வந்த மூலம், மலச்சிக்கலை குணப்படுத்தும்.
- செவ்வாழைப்பழத்தில் 75 சதவீதம் நீர் மற்றும் ஆன்டி அக்சிடன்டுகள் இருப்பதால் சருமத்துக்கு தேவையான ஈரப்பதம் கிடைக்கிறது.
- இதிலுள்ள விட்டமின் பி 6, ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.
- பாதாமுடன் செவ்வாழைப் பழத்தை கலந்து தலையில் தடவினால் பொடுகு நீங்குவதோடு வறட்சியும் குறையும்.